பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், கடந்த 6 தினங்களாக வெவ்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.