வாணியம்பாடியில் பள்ளி காவலாளி குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடியை சேர்ந்த இர்பான் என்பவர் அங்குள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஹாஜிரா துபாயில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஹாஜிராவுக்கும், அவரது தங்கை கணவரான சல்மானுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
தனது குழந்தைகள் சல்மானுடன் வளர வேண்டும் என ஹாஜிரா ஆசைப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதற்கு கணவர் இர்பான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சல்மான், பணிக்கு சென்ற இர்பானை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து சல்மானை போலீசார் கைது செய்தனர்.