திருவண்ணாமலையில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மண்டித்தெரு சந்திப்பு பகுதியில் வசித்து வரும் பாரதி என்ற மூதாட்டி நிலை தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார்.
மூதாட்டியின் கூக்குரல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்புத்துறைக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், கயிறு மூலம் மூதாட்டியைப் பத்திரமாக மீட்டனர்.