சென்னையில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் பேசிய அந்த அமைப்பின் நிர்வாகிகள், பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகள் குறித்து நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவிப்பு வெளியிட வலியுறுத்தி, வருகிற 22-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
மாவட்ட தலைநகரங்களில் வரும் மே 24-ந்தேதி கோரிக்கை மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். மேலும், ஜூலை மாதத்தில் காலவரையின்றி வேலை நிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாகவும் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.