அமெரிக்காவில் மின்னல் தாக்குதலில் இருந்து நொடிப்பொழுதில் இரண்டு பேர் உயிர் தப்பினர்.
அந்நாட்டின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அருகாமையில் உள்ள மரத்தின் மீது மின்னல் தாக்கியது.
இதில் நூலிழையில் காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். இவையனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.