ஐபிஎல் சீசனின் 23-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82 ரன்கள் எடுத்தார். 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது. இதன் மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
 
			















