பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு கொள்கையளவில் ஒப்புதல் பெறுவதற்கான விண்ணப்பத்தை மத்திய அரசிடம் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் சமர்பித்திருந்தது. இந்தத் திட்டம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளுடன் இந்த விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் விமான போக்குவரத்து துறையின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.