தர்பூசணி பழங்களை வியாபாரிகள் வாங்க முன் வராததால் அவற்றை விவசாயிகள் பறிக்காமல் செடிகளிலேயே விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கிளாதரி, மீனாட்சிபுரம், லட்சுமிபுரம், திருமாஞ்சோலை , அரசனூர் உள்ளிட்ட பகுதிகளில் 1000 ஏக்கரில் தர்பூசணி பயிரிடப்பட்டது. ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் தர்பூசணியில் செயற்கை நிறம் ஏற்றப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர் கூறியதால் அவற்றை வாங்க வியாபரிகள்
தயங்குகின்றனர்.
எனவே தர்பூசணி பழங்களை விவசாயிகள் பறிக்காமல் செடிகளிலேயே விடும் நிலை ஏற்பட்டுள்ளது. தர்பூசணி பழங்கள் விளைச்சல் கண்டு வரும் போது சிறிய முள் குத்தினாலே அந்த பழம் அழுகி வீணாகி விடும் எனவும் நிலத்தை சுத்தம் செய்யும் போதே முட்கள் அனைத்தையும் அகற்றி விடுவோம் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது சிலரின் செயலால் ஒட்டு மொத்த தர்பூசணி விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனையில் உள்ளனர்.