கந்துவட்டி வசூலிக்கும் கும்பலுக்கு காங்கேயம் போலீசார் ஆதரவாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சிவன்மலை பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவரிடம் பாண்டியன் என்பவர், 8 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்கு மாதம் 24 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தப்பட்டு வந்த நிலையில், 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாண்டியனின் சொத்துகளை கஜேந்திரன் எழுதி வாங்கியுள்ளார்.
இதுகுறித்து காங்கேயம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், கஜேந்திரனுக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாண்டியனின் மகன் செல்வராஜ், இதுகுறித்து கோவை சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.