பாலியல் வழக்கில் சிக்கிய கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, கோவை மாநகர காவல்துறை சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ், 2 சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே ஜான் ஜெபராஜ் தலைமறைவானதால் தனிப்படை அமைத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், ஜான் ஜெபராஜ் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, கோவை மாநகர காவல்துறை சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.