வேலூர் மாவட்டம், காட்பாடியில் அமைச்சர் துரைமுருகனை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற திமுக பொது கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பாஜக கூட்டணி குறித்து பேசுகையில் ஊனத்தை குறிக்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார்.
இது மாற்றுத் திறனாளிகளுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்
அமைச்சர் துரைமுருகன் மாற்றுத்திறனாளிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வலியுறுத்தி வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சில்க் மில் பேருந்து நிறுத்தத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.