ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு முழு ஆதரவு அளிப்பதாக ஸ்லோவாக்கியா அதிபர் பீட்டர் பெல்லேக்ரினி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஸ்லோவாக்கியாவுக்கு சென்றுள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது இந்தியத் தத்துவ இலக்கியங்களின் ஸ்லோவாக்கியா மொழிபெயர்ப்பு அடங்கிய புத்தகங்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பரிசாக வழங்கப்பட்டது.