கோயில் திருவிழாக்களின்போது குறிப்பிட்ட சாதி மற்றும் சமுதாய குழுக்களின் பெயர்களைக் குறிப்பிடக்கூடாது என்ற அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கைக்கு எதிராக, இந்து ஆலய பாதுகாப்புக்குழு மாநில பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பான அவரது மனுவில் அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர், அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கைக்கு 4 வாரம் இடைக்காலத் தடை விதித்ததுடன், இந்த வழக்கு குறித்து அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.