‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், இன்று வெளியாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடங்கி, சிறப்பாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஒரு நேர்மையான அரசியல்வாதி மற்றும் சிறந்த மனிதர் எனக் குறிப்பிட்ட ரஜினிகாந்த், அவரது குடும்பத்தாருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.