மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் ஒரு திருப்பு முனையாக அமையும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் சென்னிவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை முஸ்லிம்கள் பயனடையும் வகையில் வஃக்பு திருத்த சட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார் என்றும், அனைத்து முஸ்லிம்களும் இதனை வரவேற்பதாகவும் தெரிவித்தார். அரசியல் காரணத்திற்காக சிலர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் கூறினார்.
கோயில் கும்பாபிஷேக விழாக்கள் கட்சி விழா போன்று நடைபெறுகிறது என்றும், கோவில் வழிபாட்டில் விஐபி கலாச்சாரத்தால் பக்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
பாஜகவிற்கு யார் தலைவராக வந்தாலும் கட்சியை சிறப்பாக நடத்துவார்கள் என்றும், பாஜகவிற்கு அற்புதமான தலைவராக அண்ணாமலை உள்ளார் என்றும், அவரை அனைத்து மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும், அவருடைய சேவை நிச்சயமாக தொடரும் என்றும் அர்ஜுன் சம்பத் கூறினார்.