பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்களின் வீதி உலா கோலாகலாமாக நடைபெற்றது.
மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 3-ம் தேதி பங்குனித் திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான 63 நாயன்மார்களின் வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.