அமெரிக்காவில் தனியார் ஹெலிகாப்டர் நியூயார்க் நகரத்தின் ஹட்சன் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்றது. நியூயார்க் நகரத்தின் ஹட்சன் நதியில் மேலே செல்லும்போது நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.
லோயர் மன்ஹாட்டனின் ட்ரைபெக்கா பகுதியை நியூஜெர்சி சிட்டியுடன் இணைக்கும் ஹாலண்ட் சுரங்கப்பாதை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.