பல்லடம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முருகன் மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், படுகாயமடைந்த இருவரை மீட்டனர். ஓட்டுநர் கவியரசன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.