ஓசூர் அருகே அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் 4-வயதுக் குழந்தை உயிரிழந்தாக கூறி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர் அடுத்த கடுகு நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை – பிரீத்தா தம்பதியினரின் 4 வயதுக் குழந்தை கிரிஷாந்த் படியிலிருந்து தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று கொரோனா காரணமாக கிரிஷாந்த் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்துவிட்டதாகக் கூறி உறவினர்கள் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.