முதுபெரும் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தனின் உருவப்படத்திற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இரண்டு நாள் பயணமாகச் சென்னை வந்துள்ள அமித்ஷா கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். தமிழக பாஜக நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி அனந்தனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜனின் வீட்டிற்கு நேரில் சென்ற அமித்ஷா, அங்கு வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தமது தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். உள்துறை அமைச்சரே வந்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது விண்ணில் இருக்கும் தனது தந்தை மகிழ்ந்திருப்பார் எனவும் கூறினார்.