பெண்கள் குறித்த அமைச்சர் பொன்முடியின் இழிவான பேச்சுக்குக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
அண்மையில் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து இழிவாகப் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு , மகளிர் அமைப்புகள் உட்படப் பல தரப்பினரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழியும் அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ள அவர், எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுக்கள் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.