காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகளால் ஒற்றுமை பிணைப்புகள் வலுவடைந்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மேடையில் பேசிய அவர், பழமையான காசி நகரம் தற்போது புதுப்பொலிவுடன் காணப்படுவதாகத் தெரிவித்தார். காசியின் ஒவ்வொரு பகுதியிலும் வித்தியாசமான கலாச்சாரம் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், காசிக்கு வரும் அனைவரும் அதன் உட்கட்டமைப்பு வசதிகளைப் பாராட்டி வருவதாகவும் கூறினார்.
காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகளால் ஒற்றுமை பிணைப்புகள் வலுவடைந்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, தேசம் வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு முன்னேறி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.