திமுக அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மீது பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க செயலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையங்களிலும் இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.