வயலூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம், வயலூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், பால் குடங்கள் எடுத்து வந்தும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
வயலூர் பகுதி முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.