வாடிகனில் ஓய்வெடுத்து வரும் போப் பிரான்சிஸை இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா தம்பதியர் சந்தித்து அவரது உடல்நலன் குறித்து விசாரித்தனர்.
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் இரட்டை நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
பின்னர் உடல்நிலை முன்னேற்றமடைந்ததால் அவர் வாடிகன் திரும்பினார். இந்நிலையில், இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா தம்பதியர், வாடிகனில் ஓய்வெடுத்து வரும் போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தனர்.