அமெரிக்காவுக்குப் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே உள்ளன எனக்கூறியுள்ள சீனா, மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகப் பேசியுள்ள சீன அரசின் வர்த்தகத்துறை செயலாளர் ஹே யோங்கியான், அமெரிக்கா உடன் மோதலை நாங்கள் விரும்பவில்லை எனவும், அதேநேரத்தில் அந்நாட்டின் நெருக்கடிக்கு அடி பணிய மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மிரட்டல், நெருக்கடி மற்றும் அழுத்தம் ஆகியவற்றின் மூலம் சீனாவைக் கையாள்வது சரியான முடிவு கிடையாது எனவும் கூறியுள்ளார்.