உக்ரைனுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவிகளை ஐரோப்பிய நாடுகள் வழங்கியுள்ளன.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரிட்டன் பாதுகாப்புத்துறையின் செயலாளர் ஜான் ஹீலி தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் ராணுவத்தை பலப்படுத்துவதன் மூலம், ரஷ்யாவின் தாக்குதலை ஒடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
ஆயிரக்கணக்கான டிரோன்கள் வாங்கவும், டாங்கி எதிர்ப்பு சுரங்கங்கள் அமைக்கவும், ராணுவ வாகனங்களை பழுது பார்க்கவும் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.