ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் திருட்டில் ஈடுபடும் கொள்ளை கும்பலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு குயின்ஸ்லாந்தின் 17 புறநகர் பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் நுழைந்த கொள்ளை கும்பல், பணம் மற்றும் பல்வேறு பொருட்களைத் திருடிச் சென்றன.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.