சபரிமலை ஐயப்பன் கோயில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து நாள்தோறும் கோயிலில் பல்வேறு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் இறுதி நிகழ்வாகப் பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.