ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பரமக்குடி நகரின் காவல் தெய்வமான முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள் தோறும் கோயிலில் பல்வேறு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மின்னொளியில் ஜொலித்த தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.