தமிழ் ஜனம் தொலைக் காட்சியின் இரண்டாம் ஆண்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் கோலாகலமாக நடைபெற்றது.
ஊடக உலகில் நடுநிலையான செய்திகளை வழங்கி வரும் தமிழ் ஜனம் தொலைக்காட்சி ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
இந்நிலையில் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக சிறப்பு விருந்தினர்களை வரவேற்று தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் மது உரையாற்றினார்.