கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.
கொப்பல் மாவட்டத்தின் கங்காவதி, கரடகி மற்றும் கனககிரி தாலுகாக்களில், பலத்த ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் 10 ஆயிரத்து 631 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை, பப்பாளி மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. மழையின் போது மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மேலும் இந்த மழையால் 110 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.