அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கக் கோரி தமிழக ஆளுநர், சபாநாயகர் ஆகியோருக்கு பாஜக சார்பில் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து இழிவாகப் பேசியது சர்ச்சையானது.
இந்நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி பாஜக சார்பில் ஆளுநர் மற்றும் சபாநாயகருக்குப் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் அனுப்பியுள்ள புகார் மனுவில், பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்கும் போது எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாண உறுதி மொழியையும், அரசியல் அமைப்பு விதிகளையும் மீறிச் செயல்பட்டுள்ளது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவித்துள்ளார்.
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, அவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.