கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
கோடைக் காலம் தொடங்கியது முதல் கொடைக்கானலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் கடும் அவதிக்கு ஆளான சுற்றுலாப் பயணிகள், வாகனத்தை விட்டு இறங்கி நடந்து சென்றனர்.