திற்பரப்பு அருவியில் விடுமுறை தினத்தைக் கொண்டாடச் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.
அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் அங்குக் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் நீராடி மகிழ்ந்தனர். மேலும், அருவி பகுதியில் உள்ள நீச்சல் குளத்திலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் திற்பரப்பு அருவிப்பகுதி களைகட்டியது.