2026 இல் தாமரை ஆட்சி நிச்சயம் மலரும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் பேசியவர்,
தமிழக பாஜக மூத்த தலைவர்கள் H ராஜா, தமிழிசை, பொன்னார், CP ராதாகிருஷ்ணன், எல் முருகன், வானதி ஸ்ரீனிவாசன், இல கணேசன் ஆகியோர் கட்டி முடித்த கோபுரங்களை என் மண் என் மக்கள் யாத்திரை மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் நடந்தே கடந்து கட்சியைச் சேர்த்து கோபுரம் அமைத்து கலசமும் வைத்து விட்டார் அண்ணாமலை.
நமது வேலை கலசத்திற்குக் கும்பாபிஷேகம் செய்வது தான் என்றும் அதனை அடுத்த ஆண்டு மே மாதம் செய்யப் போகிறோம் என தெரிவித்தார்.
2026 இல் தாமரை ஆட்சி நிச்சயம் மலரும் என்றும் கடந்த தேர்தலில் 4 சீட்டுகள் ஜெயிச்சோம், வரக்கூடிய தேர்தலில் 40 சீட்டுகளுக்கு மேல் ஜெயிப்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இன்று நாட்டில் நடைபெறும் ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என்றும் பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றும் ஆட்சியாக, மது ஆட்சியாக உள்ள இந்த திமுக ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
நயினார் நாகேந்திரனின் கோரிக்கையை அண்ணாமலை ஏற்று செருப்பு அணிந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.