பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வருவதில்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மத்திய அரசு உதவியுடன் சுமார் 13 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், நெல்லையில் இருந்து வரும் பேருந்துகள் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் வெளியே உள்ள நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி செல்வதாக கூறப்படுகிறது.
இதனால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அத்துடன் பேருந்து நிலையத்திற்கு வெளியே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் தெரிகிறது. எனவே, பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.