மேற்கு வங்கத்தில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் உள்ளிட்ட பகுதிகளில், வக்ப் வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் பல்வேறு பகுதிகளில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. போலீஸ் வாகனங்கள் உள்ளிட்டவை தீவைத்து எரிக்கப்பட்டன.
மால்டா, ஹூக்ளி, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களிலும் வன்முறை வெடிக்கவே, முக்கிய சாலைகள் மூடப்பட்டன.இந்நிலையில், முர்ஷிதாபாதில் நிகழ்ந்த வன்முறையில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், அதில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.