தென்காசி மாவட்டம் ஆலடிப்பட்டி வைத்தியலிங்க சுவாமி கோயில் பங்குனி தேரோட்டத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
முதலில் விநாயகப் பெருமான் தேரில் எழுந்தருளி பவனி வந்தார். தொடர்ந்து வைத்தியலிங்க சுவாமி மற்றும் அன்னை யோகாம்பிகை தனித்தனி தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். குறிப்பாக யோகாம்பிகை அம்பாள் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.