தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பட்டாளம்மன் கோயில் வளாகத்தில் பாஜக புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாலக்கோடு சட்டமன்ற பொறுப்பாளர் குணா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு சட்டமன்ற இணைபொறுப்பாளர்கள் சங்கீதா, கலைச்செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வீடு வீடாக சென்று பிரதமர் மோடியின் சாதனைகள் பற்றி விளக்குவது, தெருமுனை பிரச்சாரம் செய்வது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.