சைவம், வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடி பேசியது கண்டிக்கத்தக்கது என்றும், ஒரு சமயத்தை இழிவாக பேசிய பொன்முடியை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் எனவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு சமயம் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அமைச்சராக இருப்பவர் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
ஒரு சமயத்தை இழிவாகவும் பேசுவது வாடிக்கையாகவே போய்விட்டதாகம், இதனை முதல்வர் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாஜக மாநிலத் தலைவர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துளள அவர் பதவியில் இருந்து விடைபெறும் அண்ணாமலைக்கும் பாராட்டு தெரிவத்துள்ளார்.
அவர் கட்சிக்காக உழைத்தவர் என்றும், பதவி உயர்வு பெறுவார் என்றும் ஆதீனம் கூறியுள்ளார்.