தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 2026-ல் தமிழகத்தில் மலரப்போகும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அனைத்து மதத்தின் பண்டிகைகளுக்கும் அரசு சார்பில் வாழ்த்துகள் தெரிவிப்போம் என கூறியுள்ளார்.
உலகின் தொன்மையான தமிழ் மொழியிலேயே பேசவும், படிக்கவும் தம்மால் முடியவில்லையே என பெருமையுடன் உரக்கச் கூறும் பிரதமர் மோடியின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும் வழிமொழிவதாக தெரிவித்தார்.
மக்களின் வாழ்வில் புதிய எழுச்சியையும், மகிழ்ச்சியையும் மாநில வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக இந்த தமிழ் புத்தாண்டு மலரட்டும் என கூறியுள்ளார்.
மேலும், மகிழ்ச்சி நிலைக்கும் ஆண்டாக அமைய பாஜக சார்பில் தமிழ் புத்தாண்டு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.