தமிழ் புத்தாண்டை ஒட்டி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ் புத்தாண்டின் விசேஷமிக்க தருணத்தில் உலகெங்கிலும் உள்ள தனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
தமிழ் புத்தாண்டு பண்டைய தமிழ் கலாசாரம், துடிப்பான நிகழ்காலம் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் கொண்டாட்டமாக திகழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், ஏராளமான வாய்ப்புகளை கொண்டுவரட்டும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.