தமிழ்ப் புத்தாண்டு அன்பையும், வெற்றிகளையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரதமர் மோடி, உலகெங்கும் சென்று தமிழ் மொழியின் பெருமையை எடுத்துரைத்து வருவதாகவும், சர்வதேச பல்கலைக் கழகங்களில் தமிழுக்கு இருக்கையை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஆனால், போலி திராவிட மாடல் அரசு தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் கொடுமைகளை செய்து வருவதாக குற்றம் சாட்டினார். சித்திரை ஒன்றை, தமிழ் புத்தாண்டாக ஏற்க மறுக்கும் திமுக அரசை தமிழக மக்கள் தூக்கி எறியும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும் கூறியுள்ளார்.