நம் வாழ்விற்கு அடிப்படையான மண், காற்று மற்றும் நீருக்கு நன்றியை வெளிப்படுத்தும் காலமாக தமிழ் புத்தாண்டு நாள் அமையட்டும் என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலக தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சத்குரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுப்பித்தல் மற்றும் மீளுருவாக்கத்தின் இடைவிடாத சுழற்சிகளில் இருக்கும் மண், காற்று மற்றும் நீர் ஆகிய அடிப்படை கூறுகளுக்கு நன்றி செலுத்த வேண்டிய நேரம் இது என தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை அவ்வப்போது புதிதாக மலர்வதை அவை உறுதி செய்வதாக தெரிவித்துள்ள அவர், மக்கள் மலர்வதற்கு இயற்கையின் ஆதாரமான சூரிய சக்தியை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.