மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
மொனாக்கோவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இத்தாலி வீரர் முசெட்டி மற்றும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை முசெட்டி கைப்பற்றினார்.
பின்னர் அல்காரஸ் அடுத்தடுத்து 2 செட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் 3-6, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை அல்காரஸ் கைப்பற்றினார்.