உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் போட்டி விதிகளில் மாற்றம் கொண்டுவர ஐசிசி திட்டமிட்டுள்ளது.
ஒரு நாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 2 பந்துகள் பயன்படுத்தப்படும் நிலையில், அந்த விதியை ரத்து செய்ய ஐசிசி திட்டமிட்டுள்ளது.
இதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது டைமர் கடிகாரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ள ஐசிசி, டெஸ்ட் போட்டிகளில் வெற்றியின் வித்தியாசத்தை பொறுத்து போனஸ் வழங்கவும் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.