தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழர்கள் அனைவரும் நலமுடன் இருக்க தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
இந்த ஆட்சியில் பாலியல் வன் கொடுமை, மது போதை என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மக்கள் விரோத ஆட்சி மாற்றப்பட்டு, என்டிஏ கூட்டணியின் கீழ் புதிய ஆட்சி அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.