அம்பேத்கரின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் நிலைக்க உறுதி ஏற்போம் எனத் தெரிவித்துள்ளார்.