திண்டுக்கல் மாவட்டம் பூம்பாறை கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி விமர்சையாக நடைபெற்றது.
கொடைக்கானல் மேல்மலை கிராமம் பூம்பாறை பகுதியில் மழை வேண்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
வாடிவாசலிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு விரட்டிச் சென்று பிடித்தனர். இதனைச் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.